சிந்திக்க-சிரிக்க
ஒரு போலிஸ் ஸ்டேஷநில் நடைப்பெற்ற
--------------------------------------------------------------------
உரையாடல்
---------------------
முத்து: ஐயா சார் இன்ஸ்பெக்டர் சார்
இந்த அநியாயத்தை யாரிடம் சொல்வேன்
இன்ஸ்பெக்டர் : அதான் என் கிட்ட சொல்லதானே
வந்தங்க; சொல்லுங்க கேக்கலாம்
முத்து : என் பிள்ள என்ன வீட்ட விட்டு
வெரட்டறான் அய்யா ; சோறு கஞ்சி
தரமட்டேன்றான் அய்யா ;என் வீட்ட
இப்பவே அவன் பேருக்கு மாத்த
சொல்றான் ; நான் வளர்த்த
தென்னயிலிரிந்து இளநீர் கூட
தர மறுக்கரன் அய்யா.
பிள்ளைய பெத்தா கண்நீருங்க
இதுக்கு ஏதான செய்யனுங்க
இன்ச் : சரி முத்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி
கொடு நடவடிக்கை எடுக்கலாம்
ஆனா ஒன்னு சொல்லணும்
இருவது வருடம் முந்தி நான் ஏடா
இங்கே வந்து சேந்தப்ப உன் அப்பா
சேதுபதி இதே கம்ப்ளைன்ட் உன்
மீது தந்தார் ஞாபகம் இருக்கா?இப்போ
அதையே ஒன் பையன் ஒனக்கு
செய்யறான் புரிஞ்சுதா ? தன் வினை
தன்னைச் சுடும் .
இருந்தாலும் உன் பையன்
செய்யறது சட்டப்படி குற்றம்
அவன் வழிக்கு வரலானா கைது
செய்யலாம் .
முத்து: நன்றி ஐயா ; நான் அன்னிக்கு செய்தது
பெரும் தவறு; அதை உணர்ந்து
திரிந்தினேன் ; ஆனால் செய்த
குற்றத்துக்கு சட்டம் தரலேன கூட
ஆண்டவன் தந்துட்டான் ஐயா
இன்ச்: சரி போங்க பெத்தவங்கள மதிக்கணும்
தெய்வம் போல எண்ணனும் அதா இப்ப
புரிஞ்சிகோங்க
முத்து: வரேன் ஐயா -பாடறார் "தென்னைய
பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா
கண்ணீரு " யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க !
வெளியேறுகிறார்
------------------------------------------------------
.