குறி 7

ஆயிரம் ஆயிரம் ஏச்சுக்கள்
ஐநூறு ஐநூறு பேச்சுக்கள்
முந்நூறு முணுமுணுப்புக்கள்
இருநூறு போடும் பல நூறு கடுப்புகள் இருந்தும்
பொறுப்புணர்ந்து புன்னகைக்கும் மனைவி?!....

வெளிநாடு செல்லும் மகனை
வழியனுப்பும் தாயின்
ஆனந்தக் கண்ணீரில்
நனைந்து அழிந்தது
தாய் நாட்டுப் பாசம்?!....

ஆட்டுக் கல்லின் கிராக்கியை பார்த்து
ஆச்சர்யப்படுகிறதாம்
விலையில்லா மிச்சியும் கிரைண்டரும்?!....

முறுக்கு மீசையின்
வெள்ளை முடி நரையல்ல!!....
அனுபவ நுரை?!....

பௌர்ணமிக்கும் அமாவாசைக்குமான
காலதாமதங்கள் குழந்தையின்
உச்சி முகரும் அம்மாக்களின்
முத்தங்களின் மீதியில் கழிக்கப்படும்?!....

பூக்காரியின் புன்னகையில்
புதைந்து கிடக்கின்றன
ஆயிரம் ஆயிரம் புத்திமதிகள்?!.....

முத்துலாபுரம் அருவா போல
கூர்மையாய் இரு?!....

பூசனம்பட்டி போயி கையை கட்டினாலும் பரவாயில்லை உண்மையாய் எழுது?!....

காமராசபுரத்துக்கு போயி
மந்திரித்து வந்தாலும் பரவாயில்லை
தந்திரமாய் பேசு?!......

எழுதியவர் : வைகை அழகரசு (27-Mar-14, 3:17 pm)
பார்வை : 109

மேலே