மௌனம்

மௌனமாய் படியுங்க ......


பேசிய வார்த்தைகளை விட
பேசாத வார்த்தைகளுக்கு வலிமை அதிகம் ........


பல்வேறு பரிணாமங்களில் மூளையின்
பரவசமான செயல்பாடு மௌனத்தில் .....

வீரம்
விவேகமாய் வெளியில் வருவது மௌனத்தில் ...

தன்னம்பிக்கை
தண்ணீராய் ஊற்று எடுப்பது மௌனத்தில் ....

அக அமைதி
ஆனந்தமான மௌனத்தில் ....

புதுமையான எண்ணங்கள்
புத்துயிர் பெறுவது மௌனத்தில் .....

தீர்க்கமான
தீர்ப்புக்கள் மௌனத்தில் ....

கணவன் மனைவியின் வாக்குவாதத்தில்
எச்சரிக்கை சின்னமாய் மௌனம் ....

காதலில் நெருக்கம்
மௌனத்தில்

கருவறையில் மௌனம்
மயானத்திலும் மௌனம் ....

பேசாத மொழி
புரியாத மொழி
ஆனால்
புத்துணர்வு தரும் மொழி
அக அமைதிக்கு

மௌனத்திற்கு மௌனமாய் வாக்களித்து
அமைதி எனும் பரிசை பெறுவோம் ..............

எழுதியவர் : கிருபகணேஷ் நங்கநல்லூர் (27-Mar-14, 4:01 pm)
Tanglish : mounam
பார்வை : 240

மேலே