அலிகள்

கடவுளின் ஹார்மோன்கள் விளையாட்டு
கடும் விஸ்வ ரூபம் எடுத்ததால்

கடினமான பாதையை
கடும் போராட்டத்துடன் கடக்கின்றோம் ..

படிக்க வாய்ப்பு இல்லை
படிக்காததால் வேலை வாய்ப்பும் இல்லை ..

பிச்சை தொழிலில்
பெரிதாய் ஒன்றும் கிடைக்காததால்

சூறையாடுதல் பெருமை என
சூறையாடலில் இறங்குகின்றோம்

ஓரமாய் இருக்கின்றோம்
ஓங்கிய வாழ்க்கை இல்லா விட்டாலும்

ஒதுக்காதீர்கள்
எங்களையும்
எங்கள்
சுய மரியாதையும் ......

நன்றி இவ் வளையத்தில் எங்களை பற்றி
கூற வாய்ப்பு கொடுத்ததற்கு ..........

l

எழுதியவர் : கிருபாகணேஷ் நங்கநல்லூர் (27-Mar-14, 4:06 pm)
பார்வை : 201

மேலே