இழப்பு

ஊரும் உறங்கிருச்சு
ஊளை சத்தம் ஓங்கிருச்சு
உச்சி கிளை சுருங்க
பெரு மரமும் தூங்கிருச்சு
ஏத்திவச்ச சிமிழ் விளக்கும்
சீவன இழந்துருச்சு
அட ஒத்த வீட்டுலயும்
குறட்டை சத்தம் கேட்டுருச்சு
ஆத்தி அரை நாளி
பாவி மனம் தூங்கலயே
பருத்த விழி ததும்பி
ஒடும் நீரும் ஓயலயே
ரெக்க விருச்ச கிளி
போகுந்தெச தெரியலயே
ஆத்தே வழி காட்ட
மூத்த கிளி தொனையில்லயே
எட்டு வச்ச நட
ஏனோ நகரலயே
போகும் திச காட்டும்
ஏ
திசமாணி இயங்கலயே
பாதிக் கெணறு தாண்ட
பாதய வகுத்தீரே
இனி
மீதிக் கெணறு தாண்ட
காலம்
என்ன பாடு படுத்திடுமோ..