மின்சாரம்
மின்சாரத்தை கண்டுபிடித்த ஆம்பியரை விட
எம் தாயே சிறந்த விஞ்ஞானி என்பேன்
ஏனென்றால்,
கருவறையில் அன்று அவள் இருட்டில் இருக்க
கற்றுக் கொடுத்ததால் தான்
இன்று மின்சாரமற்ற நாட்டில் வசிக்க முடிகிறது
என்னால் !!
அன்று பத்து மாதம் இருட்டில் இருக்க முடியாமல்
வெளிவந்த நாம் ,
இன்று மொத்த மாதமும் இருட்டில் தவிக்கும்
ஆனந்த நிலை!!!