மெரினாவில் சில மணித்துளிகளுடன் நான்
![](https://eluthu.com/images/loading.gif)
திங்களன்று
திங்கள் தோன்றிய நேரமது ......!
நிலவின் ஒளி போதாதென்று ,
ஆங்காங்கே மிண்ணொளி
காளான்கள் முளைத்துக் கிடந்தன .......!
அதனடியில் ,
பண்டங்களை ஏந்த சில கரங்களும் ..,
அந்தக் கரங்களை எதிர்பார்த்து சில கண்களும்
ஆர்வமுடன் ......!
-- என் கரங்களையும் சேர்த்துத்தான் .....!
என்னைக் கட்டியனைத்த காற்று
கடலை நெருங்கும் ஆர்வத்தை அதிகரித்தும் ........,
சிதறிக் கிடந்த வெண் முத்துக்கள்
என் கால்களின் வேகத்தைக் குறைத்தன ......!
இதுவும் நன்றாகிப் போனது ....,
பரந்த காட்சிகளை மெதுவாக நகர்த்திய போது ......!
உழைப்பையும் விடாமுயற்சியையும்
நம்பி (க் ) கையுடன் பணக் கருவிகளைத் தாங்கிய
புத்தகம் ஏந்தும் பிஞ்சுக் கைகள்
வாழ்க்கையின் விடியலை நோக்கி ஆங்காங்கே ......!
காற்றடைத்த வானவில்களை
கட்டி வைத்து சுட்டுத்தள்ள
கூடியிருந்த மழலைப் பட்டாளங்களின்
சிரிப்பு வெடிகள் ஆர்ப்பரித்தன .........!
அடைத்து வைத்த பொழுதுபோக்கு மாதிரிகள்
அடிக்கடி தந்தைமார்களின் சேமிப்புகளை
அன்பின் விலைகளாக
வங்கிக் கொண்டிருந்தன .....!
ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல்
இதழ் தேன்களைப் பரிமாறிக்கொள்ள
இடம் தேடியமர்ந்து நடமாட்டம் காணும்
காதலர்களின் கண்கள் பசியுடன் .....!
- நடை வியாபாரிகளின் இடையூறுகளையும்
சமாளித்துக்கொண்டே .......!
நடை - பழகுபவர்கள் முதல்
தளர்ந்தவர்கள் வரை தங்கள்
பாத முத்தங்களைப்
பரிசளிக்கத் தவறவில்லை
கோர்க்கப்பட்ட வெள்ளித் துகள்களுக்கு .....
சிறு நேர கோபுரங்கள்
தயாராகிக் கொண்டிருந்தன
மழலை விரல்களின் படைப்புகளாய் ...,
அன்னமூட்டும் கரங்களின் உதவியுடன் .....
இத்துணை அசைவுகளுக்கும் மத்தியில்
சாய்வுப் படுக்கையில்
ஓய்வெடுக்கும் நினைவுச் சின்னமாய்
வண்ணமரப் படகுகள் ஓவியமாய் ......
கரைகளில் அணிவகுத்த
பல கால்களுடன்
என் தாங்கிகளையும்
இணைக்க முனைப்பட்டேன் .....
ஈரக் காற்றின் எச்சில் பிம்பங்கள்
என்னைத் தொட்டுவிட்டுப்போக
நான் சில்லரித்த சமயம்
எனக்கென மடி தந்தது அந்த
மணல் அடுக்கிய திட்டுக்கள் .........
என் பாதங்களை மட்டுமே தழுவிக்கொள்ள
அனுமதி அளித்திருந்தும்
வரம்பு மீறத் துடித்தன
அன்பின்பால் உந்தப்பட்ட நீரலைகள்....
என் அன்பைப் பெற ....
அலைகள் அணைத்த அச்சமயம்
விட்டுவிட்டேன் என்
அத்துணை நினைவுகளையும்
அக்கணத்தில் மட்டும்
ஈரக் காற்றில் கறைந்தோட ....
துடைத்து வைத்த ஈரமண்ணில்
பதித்து வந்தேன் என்
பாத சின்னங்களை
அணியணியாய் ......
அவைகளை அலைகள்
அணைக்கும் முன்
மனமின்றி இடம்பெயர்ந்தேன்
என் முழு நேர இயந்திர உலகிற்கு ...........