வெண்ணிலா
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே,
உன்னை போல் நானும் ஜொலிக்க ஆசை,
உதவி செய்வாயா,
வா நிலவே வையத் திருவே.
எல்லை யில்லா வானம் என்னும் பெண்ணுக்கு,
வெண்ணிலாவே,
நீ தான் வெள்ளைப் பூவோ,
உன்னை நானும் சூட ஆசை,
உதவி செய்வாயா,
வா நிலவே வையத் திருவே.