விழைகிறேன்
எண்ணங்களை கோர்த்து
வண்ணங்களை சேர்த்து
உயிரையும் தோய்த்து
வரைந்தேன் மடல்
காத்திருந்தேன் உனக்காக
உன் கரம் சேர்ப்பிக்க
ரம்மியமான பொன்மாலை வேளை
தென்றல் வீசும் இதமான பொழுதில்
அமர்ந்திருந்தேன் பூங்காவின் திடல்
வண்டுகளின் ரீங்காரம்
மலர்களை தீண்டியே அங்கு
சிட்டுகளின் காதல் கானம்
கூடுகளை அடைவதில் வெகுவேகம்
இருப்புக்கொள்ளவில்லை எமக்கும்
பாளும் மனம் சபிக்குதே ஓர் நொடிப்பொழுதையும்
மலர் நாடும் வண்டு அல்ல இவன்
உன் மனம் கொள்ளவே விழைகிறேன்
இருமனம் சேர்ந்தே யாவையும் வெல்ல