உன்னை மட்டுந்தான்

கவிதைகள் -என்று
சொல்லிப்பார்த்தேன் -அது
எல்லாம் நீதான் -என்று
ரீங்காரமிட்டது........மூளை
காதல் என்று எண்ணிப்பாத்தேன்
அது உன் கண்கள் -என்று
என் மனது தந்தியடித்தது.........
பூக்கள் என்று -நான்
சொல்லிப்பார்த்தேன் -அது
உன் புன்னகை என்று
தென்றல் சொல்லிபோனது.........
அழகு என்று சிந்தித்தேன்
அது நீதான் என்று -என்
கண்கள் சிமிட்டிச்சொன்னது.........
மொத்ததில் என் பேனாவும்-என்
கவிதையும் சொல்வது-உன்னை
மட்டுந்தான் -என்று
நான் சொல்வது தப்பில்லை.........