நீயும் நானும் மீதமினி - மீமணிகண்டன்
என்னை உன்னை நம்பித்தான்
... எல்லாம் இங்கே நடக்குதடா.
எனக்கும் உனக்கும் தேவையெனில்
... எல்லாம் மறைந்தே போகுதடா ?
ஐந்துமா தங்கள் நமைநாடும்
... ஐந்தாம் அறிவுத் தெருக்கூத்து
ஐந்தாண் டுகள்பின் நாம்தேட
... அழிந்தே மறையும் வெறுங்காத்து !
விடலைக ளில்லை நாமுமினி
... வெறுங்கை முழத்தை நம்புதற்கு,
வேட்டைக ளாடி உரிமைபெற
... வேங்கை என்பதை நிலைனிறுத்து !
மயக்க நிலையில் நாமில்லை
... மாயா ஜாலம் பார்த்திருக்க
வியர்க்க உழைக்கும் மாந்தர்நாம்
... விடியல் கொடுக்கும் வெளிச்சம்நாம் !
இனியொரு காந்தி வரமாட்டார்
... இழந்த சுதந்திரம் பெறுதற்கு
இரண்டாம் பாரதி வரமாட்டார்
... எழுச்சி புரட்ச்சி பாடுதற்கு.
உண்மை எங்கும் நிலைப்பதற்கு
... உரிமை என்றும் கிடைப்பதற்கு
உணர்ந்திடு நான்,நீ மிச்சமென்று
... ஒளிமயத் தீர்ப்பை வழங்குதற்கு !