கூட்டுக் குடும்பம்
புகைப் பட ஆல்பமும் ஒரு
புதுக் கவிதைப் புத்தகம்.....!!
பூரித்த படி எப்போதும் அதற்குள்
போட்டோ கூட்டுக் குடும்பமாய்....!!
கவிதை பிடித்தவர்களுக்கு - வாழும்
காலங்கள் இனிது.....!! - அதனால்
கடிகார முட்கள் கூட - குழந்தையென
காட்டும் ஓட்டம் புதிது...!!
காதோடு வைத்துப் பாருங்கள் - வாட்சுக்கும்
காதலோடு இதயத் துடிப்பு...!!
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து பாருங்கள்
விட்டுக் கொடுப்பது ஒரு நல்ல படிப்பு...!!
.