நாடு வேண்டாம்

நாடு வேண்டாம்
நாடு விட்டு
காடடைவோம் ..........
நாமெல்லாம்
வேண்டாம்
வீடு வாசல்
அவை துறந்து ......
நாம் ....
போவோம் .....
வனவாசம்.....



ஊன்
உண்ட
உற்சாகத்தில்
உச்ச ஸ்வரத்தில்
ஊளையிடும்
நரிகள்
வாழுது காட்டில் ........



உணவுக்கு வழியில்லாமல்
ஊனமாய்
ஊசலாடும்
உயிருடன்
பலவீனமாய்
வயிற்றில்
ஈரத்துணியுடன்
ஈனமாய்
இயலாமையில்
வாழ்கிறோம் நாங்கள்
நாட்டில் ........



இலை குலை தழை
உடையாக்கி
மரப்பட்டைகளை
மானத்துக்கு
குடையாக்கி ...
மானமாய்
மரியாதையாய்
மனிதராய்
வசதியாய் ...
வாழும்
காட்டு வாசிகள்
காட்டில் .....



வஸ்திரம்
வாங்க
வழியின்றி
மானம்
மரியாதைக்
காக்க
உடையின்றி
அரைகுறையாய்
இடை
மறைத்து
அதிலும்
கிழிசல்
தைத்து
அவமானாய்
அநியாயமாய்
பரிதாபமாய்
பரிதவித்து
வாழ்கிறோம்
நாங்கள்
நாட்டில்



தினம் ஒரு மரப்பொந்தில்
நிதம் ஒரு மரக் கிளையில்
விதம் வித
வடிவ
வீடுகளில்
உரிமையாய்
சொந்தமாய்
கூடுக் கட்டி ......
குதூகலமாய்
குடும்பம் நடத்தும்
பரவச
பறவை இனங்கள்
வாழுது காட்டில் ........



நிரந்தரமாய் ஓர்
வீடின்றி
சுதந்திரமாய் ஓர்
கூடின்றி
கூலிக் கூடாரங்களில்
வீட்டு உரிமையாளர் முன்
கூனிக் குறுகி
அடிப்படை வசதி
ஏதும் இன்றி ......
அடுப்பு ஊதவும்
இடமின்றி
அலைக்கழிந்து
அடிமைகளாய்
அடி மாடுகளாய்
வாழ்கிறோம் நாங்கள்
நாட்டில் ..........



நாடு வேண்டாம்
நாடு விட்டு
காடடைவோம் .
நாம் ........

எழுதியவர் : கீதமன் (1-Apr-14, 7:58 pm)
சேர்த்தது : கீதமன்
Tanglish : naadu ventaam
பார்வை : 49

மேலே