பறவை வேட்டை - நேரிசை வெண்பாக்கள் 15

ஆறறிவு மானிடன் வேட்டையை ஆடுகிறான்
ஆறாம் அறிவுபற வைக்கில்லை – மாறாக
அப்பறவை மானிடனை ஆனாலும் சந்தேகம்
எப்போதும் கொள்ளாது காண்! 1 *

ஆறாம் அறிவுபற வைக்கில்லை என்றாலும்
மாறாக அப்பறவை மானிடனை – வேறாக
எப்போதும் கொள்ளாது சந்தேகம்! வேட்டையாடும்
தப்பான மானிடன்தான் நீ! 2 *

மாசறியாப் புட்க ளினமோ மரக்கிளையில்
நேசமுடன் தங்கிடுமே! நன்பறவை – ஓசையின்றி
ஓய்ந்திருக்கும் வேளையிலே ஓர்மட்டை கொண்டுதான்
மாய்த்திடுவான் மானிடனும் தேர்ந்து! 3 *

பல விகற்ப பஃறொடை வெண்பா

ஆறறிவு மானிடன் வேட்டையை ஆடுகிறான்
ஆறாம் அறிவுபற வைக்கில்லை – மாறாக
அப்பறவை மானிடனை ஆனாலும் சந்தேகம்
எப்போதும் கொள்ளாது என்றாலும் எந்நாளும்
தப்பான மானிடன்தான் நீ! 1 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-14, 10:01 pm)
பார்வை : 96

மேலே