58 தொடர்கின்றேன் என்பயணம்

சொந்தக் கவிதை - 58

இதயம் இன்பத்தில் மகிழ்ந்தபோது
கவிதை மடை திறந்த வெள்ளம் போல்
பெருக்கெடுத்து ஓடியது
அடுக்கடுக்காய் வேதனைகள் வந்தபோது
இதயம் பாலைவனமாய் வரண்டதனால்
சிந்திக்கும் திறன்அற்றுப் போனதுதான்பரிதாபம்

ஒன்றை புரிந்துகொண்டேன்
வாழ்க்கை என்பது
மாறி மாறி வரும் சக்கரம்
இன்பமுண்டு துன்பமுண்டு
இரவுண்டு பகலுண்டு
நண்பருண்டு பகைவருண்டு
மழையுண்டு வெயிலுண்டு
புயலுண்டு தென்றலுண்டு
காலையுண்டு மாலையுண்டு
மாறிமாறிவரும் காலச்சக்கரத்தில்
எதுவுமே நிலைத்திருப்பதில்லை
இறைவன் மேல்பாரத்தை போட்டுவிட்டு
தொடர்கின்றேன் என்பயணம்
(சமர்ப்பணம்: நண்பர் திரு தீனதாயாளன் நாகராஜன்)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (2-Apr-14, 7:21 pm)
பார்வை : 56

மேலே