அந்தாதி வடிவக் கவி

அந்தாதிகளை அமைப்பது மிகக் கடினமான வேலை என்றாலும் இலகுவில் மனதில் நிற்கக் கூடிய இலக்கிய வடிவம் என்ற வகையில் இவ்வகை அந்தாதிகள் இன்னும் நிலைத்து நிற்கிறது . சிறப்பம்சம்; ஒவ்வொரு அடியிலும் வரும் இறுதிச் சீர் அடுத்த அடியின் முதற் சீராக வரும் . இறுதி சீரின் இறுதி அடி முதலடியின் முதற் சீராக வரும் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



***மானிட வேடங்கள் முற்றிலும் கலையட்டும்
**கலைந்திடும் தீமையால் உலகம் களைகட்டும்
களைகட்டும் வார்த்தைகள் என்றும் நிலைக்கட்டும்
*******நிலைக்காத உலகமிங்கு எது மட்டும்?
******மட்டுப்படாத மனித இனம் பெருகட்டும்
பெருக்கெடுக்கும் வார்த்தைகளில் தேன் ஒழுகட்டும்
*ஒழுகுவதால் நன்னெறி என்றும் தழைக்கட்டும்
****தழைத்திடும் மரமாய் வளரட்டும் மானிடம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : (1-Apr-14, 1:15 pm)
பார்வை : 101

மேலே