கேள்வியின் நாயகனே

கேள்வியின்
பதில் தான்
நாமெல்லாம்
பிறந்த உடனே
ஒரு கேள்வி
குழந்தைக்கு
பெயர் என்ன ?
வாழ்க்கை
எல்லோருக்கும்
ஒரு கேள்வியோடு
ஆரம்பித்து
ஒரு பதிலோடு
முற்று பெறுகிறது
மனிதா
பேச உனக்கு
துணிவு இல்லை
என்றாலும்
உன் முகத்தையாவது
மற்றவரை
பார்க்க செய்
நீ இருக்கிறாய்
என்றாவது தெரியும்
துணிவு இல்லாதவர்க்கு
இரண்டு
இடத்தில் நிச்சயம்
இடம் உண்டு
ஒன்று
கருவறை
மற்றொன்று
கல்லறை
தோல்வி என்று
ஒன்று இல்லவே இல்லை
வாகன ஊர்தியில்
இடம் இல்லை
நமக்கு
ஆனால்
போகும் இடத்திற்கு போக
நம்
கால்கள் இருக்கிறது
வெற்றியும் அவ்வளவே
விழுந்த இடத்தில்
தேடாதே
நீ தேடுவது
வேறு இடத்திலும்
கிடைக்கும்
உன் மூச்சு காற்று
ஒரு மரத்திற்கு உணவு ,
எதுவும் செய்ய வில்லை
என நீ
நினைத்தாலும்
ஏதோ செய்து கொண்டு தான்
இருக்கிறாய்
உன் வாழ்நாள்
உன்னால்
தீர்மானிக்க முடியாது
உன் வாழ்க்கை
உன்னால் மட்டுமே
தீர்மானிக்க படும்
தற்கொலை முயற்சியா ?
ஒரு நாள்
தள்ளி போடு
வாழ அன்று
ஒரு நாளாவது
முயற்சி செய்
நீச்சலை கடலில்
அடிக்க பழகு
ஆற்றை கடப்பது சுலபம்
முயற்சியை உன்னால்
முடியாது என்பதில்
முயன்று பார்
வாழ்க்கையில் ஜெயிப்பது
சுலபம்
தோற்றால் கடவுள்
இல்லை
ஜெயித்தால் கடவுள்
இருக்கிறான்
என்று
சொல்பவனா நீ
தெரிந்து கொள்
கடவுள் உன் செயலில் தான்
இருக்கிறார் என்பதை
கேள்வியின் நாயகனே
உன்
கேள்விக்கு நீயே பதில் !!!