புரிந்துணர்தல்

என் யுகங்களையெல்லாம்
உணர்த்திச் செல்ல
உதிரவேட்டை நடக்கையில்
உதாசீனப்படுத்துவதாக உனக்கு

உயிர் பற்றியெரிகிறது
உளறிவிடுவேனோ உயிரின் வலியை
உணர்வதுனக்கு யுகமாக இருக்கலாம்
இதயமா மனமா என மரணவேட்டை நடத்தலாம்
வேட்டையின் வாசல் எனதல்லவா

இழந்த நொடியெல்லாம் நெடியதுதான்
நெம்பித்தள்ள ஆற்றலின்றி
நடந்த நினைவுகளும் அடைந்த அனுபவங்களும்
அதிகார தோரணையில் ஆபத்தாக
தன்மானம் தலைக்குமேல் தாளத்துடன்

கூறுபோட குட்டிசுவராகிவிடும் கனவு
ஆறுபோல ஆழ்மனதை அள்ளிச்சென்றதோ
அருகிருக்க அபிப்பிராயம் ஆதியிலே இல்லை
அணைபோட அவதாரம் தேவையில்லை அணைக்கும் கரம் அழிக்கும் அர்த்தத்துடன்

எனக்கான தேடல்கள் தொலைந்து போய்விடினும்
தேடலுக்காக ஒய்ந்துபோகவில்லை
ஆதவனை மறைக்கும் மேகமாயினும்
அரைநொடியில் அகிலம் நோக்கும்
வன்மையை மரணிக்க செய்யும் மென்மையாய் ...

எழுதியவர் : bhanukl (2-Apr-14, 8:41 pm)
பார்வை : 115

மேலே