குட்டிப் பா - கே-எஸ்-கலை

துள்ளி துள்ளி
விளையாடும் குழந்தைகள்
இழவு வீட்டில் !
===
வீங்கி வீங்கி
வெடிக்காது! வெடிக்கவைக்கும்
பணவீக்கம் !
===
முட்டி முட்டி
பால் உறிஞ்சும் கன்றின்
நாவில் ரத்தம் !
===
தடவி தடவி
இன்பம் காண்கிறான்
நிர்வாணச் சிலை !
===
வேக வேகமாய்
மரம் அறுக்கிறார்கள்
சவப்பெட்டி செய்ய !

எழுதியவர் : கே.எஸ்.கலை (3-Apr-14, 12:38 am)
பார்வை : 198

மேலே