இப்படியும் ஒரு காதல்
இல்லை என்று
நிதர்சனமாய்
தெரிந்த பிறகும்
தேடச் சொல்கிறது
மனது...
பிரிந்ததற்காய்
வருந்தியிருக்கிறேன்...
தொலைத்ததற்காய்
துயரப்பட்டதேயில்லை...
காணாமல் போனதற்காய்
முதல் முறையாய்
கண்ணீர் வடிக்கின்றேன்...
என் கண்ணீருக்கு
அர்த்தமில்லாவிட்டாலும்
காரணம் இருக்கிறது...
நல்ல புத்தகம் என்று
நாலுபேர் இரவல் கேட்ட
புத்தகம் இன்று என்
கையிலும் இல்லை...
கடையிலும் இல்லையாம்...
தவறு என்னுடையதுதான்
அரியது என்று தெரிந்தும்
அலாதியாய் விட்டு விட்டு...
அனாதையாய் நின்று
இன்று அரற்றுகின்றேன்...!