வர்ணனை வலைவீச்சு 0தாரகை0
![](https://eluthu.com/images/loading.gif)
மயில் என்றாய்
மயங்கிப் போனேன்
அமில மழையில்
ஆடச் சொன்னாய்.
மான் என்றாய்
மகிழ்ந்து நின்றேன்
வேடன் குணம் கொண்டு
வில்லால் வீழ்த்திவிட்டாய்.
தேவதை என்றாய்
திக்குமுக்காடினேன்
தேகம் தீண்ட வந்து
தீக்கிரையாக்கினாய்.
மலர் என்றாய்
குளிர்ந்து போனேன்
இதழ் பிய்த்து
வதம் செய்தாய்
செத்துப்போவதும்
உயிர்வாழ்வதும்
சகஜம்தான்.
செத்துசெத்து
உயிர்வாழ்வதோ
மிக சிரமம்தான்.
என்னை பெண்ணாய் மட்டும் பாருங்கள்.