பேருந்து நிறுத்தங்கள்

நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ந்த ஆரம்பக் கட்டம். மிக பெரிய நெருக்கடியில் தான் பள்ளிக்கு சென்றேன் ....
காரணம் 10-ம் வகுப்பு தேர்வு விடுமுறையில்,
நான் சந்தித்த அந்த பெண் தான் நெருக்கடிக்கு காரணம். அரும்புமீசை அரும்பியக் காலம்.
அந்த காதலைப் பற்றி சொன்னால் ....
வள்ளுவர்கோட்டத்துக் காதலைப் பற்றி பேசுவதில் தாமதம் ஏற்படும் .......


வள்ளுவர்கோட்டத்தில் என் காதலி .......



பேருந்தின் வருகைக்காக காத்திருக்கும் பலரையும் போல....
நானும் பேருந்தின் வருகைக்காகவே காத்திருந்தேன்
அந்த நிறுத்தத்தில் .....
அவளை காணாத வரையில் ....

நிறுத்தங்கள் பலவும்...
பேருந்தை எதிர்ப்பார்த்து நிற்பதில்லை .....
காதலிகளை
எதிர்ப்பார்த்து நிற்கும்
காளையர்களுக்காகவே நிற்கிறது ....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 4:35 pm)
பார்வை : 86

மேலே