கல்லூரி வனத்தில்♥பிரியாவிடை

இளம் மாலை பொழது கல்லூரி சோலையில் வலம் வருகிறேன்....
கடந்து வந்த பாத பதிவை ஒரு முறை முத்தம் இடுகிறேன்

பாடசாலையில் குருவாய்...வாளகத்தில் தோழியாய்
உள்ளத்தில் தாயாய் இருந்த --ஆசிரியார்கள்

நாங்கள் இளம்கன்றாய் வருகையில் அரவனைத்த எம் வகுப்பு சகோதிரி.....நினைவில் வருகிறாள்.

முதன் முதலாய் நான் என்னை அறிமுகப்படுத்தியது...
என்னை எனக்கு அடையாளம் கண்ட தருணம்...

புன்னகையுடன் பூத்த நட்பு ...
வட்டமாய் அமர்ந்து ஓரே தட்டில் உண்ட காலங்கள்...
தோழக்கு தோழியாய்...மனதுக்கு மனசாட்சியாய் இருந்த தருணம்....

நேரம் தெரியாமல் பேச்சு சில நேரம்....
கண்ணீர் துளில் சில நேரம்...

சின்ன சிறு சண்டை...செல்ல திட்டு,...
குறுச் சிரிப்பு....மனதை குத்தாத கேலி...

அருமையிலும் ரசனையிலும் ஏதும் நிகர் இல்லை.
குருதியால் உருவானது இல்லை நம் நட்பு
உறுதியும் நற்எண்ணத்தாலும் மின்னுவது நம் நட்பு.

கல்வி தேனை அருந்த வந்த தேனீக்கள் நாங்கள்
கல்லூரி சுவரில் எங்கள் கைரேகை பதித்தால்
எங்கள் தலையெழத்து ஆழகானது.

கண்ணீர் எட்டிப்பார்க்கிறது,,,,பிரிவை எண்ணி...
மதி சமதானம் சொல்ல...மனம் ஏற்கமறுக்கிறது...
எங்கு போக போகிறோம்....நாம் என்றும்
ஒரு வானத்துக்கு கீழ்.

உணர்வாய் உண்மையாய் இருந்த நமக்கு
பிரிவு என்று சொல் கிடையாது...
*-தங்கம

எழுதியவர் : தங்கம் (5-Apr-14, 12:14 am)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 3907

மேலே