பிறந்த நாள் வாழ்த்து

நண்பனுக்கு நானெழுதும் பிறந்தநாள் மடல்
""""""""""""""""" """""""""""""""""" """""""""""""""" """"""""
கருவறை பந்தத்தால்
நாம் இணைக்கப்படவில்லை !
கல்லறை வரை தொடரும்
நட்பு எனும் பந்தத்தால்
ஒன்றாய் பிணைக்கப்பட்டோம்
அன்பின் இருதுருவங்களாய் !
வீசும் தென்றலின் இனிமைகூட
இங்கே தெகிட்டிவிடக்கூடும் !
நம்நட்பெனும் மூச்சுக்காற்றுக்கு
இங்கே இணையேதும் கிடையாது!
வெண்ணிற நிலவின் ஒளிகூட
வெளுத்து போய்விட்டது !
நாம் பழகிய நாட்களின்
தருணங்களின் பிரகாசிப்பில் !
பெருநிலஞ்சூழ் ஆறுகள் கூட
சிறுகுட்டைகளாகிப் போனது !
நம்மை சூழ்ந்திருக்கும்
நட்பெனும் பெருங்கடலுக்குமுன் !
என் அன்பு நண்பனே !
ஆண்டுகள் பலநூறு வாழ்வாயாக!

இப்படிக்கு
உன்னில் கலந்த
நா.அன்பரசன்..

எழுதியவர் : நா.அன்பரசன் .. (4-Apr-14, 11:48 pm)
சேர்த்தது : anbuarun
பார்வை : 196

மேலே