அவன் அவள் நட்பு

ஒளவை அதியன் காலத்தில்
சாத்தியப் பட்டிருக்கிறது
ஆண் பெண் நட்பு....!
விஞ்ஞானம் வீறு நடை போடும்
இந்த இருபத்தோறாம்
நூற்றாண்டில் ஏனோ
அவர்கள் நட்பு
அக்னி பிரவேசத்திற்கு உள்ளாகிறது
கை பிடிப்பவன்
கணவனாகத்தான்
இருக்க வேண்டுமோ?
தோள் சாய்தல் காதலாய் தான்
இருந்திடுமோ?
காதலில்லா நட்பை
காமப் பார்வை பார்க்கும்
உலகம் மாறுமா?
ஆடையில் நாகரிகம்
சிந்தையில் அசிங்கம்
பிடித்த அயோக்கியத்தை
அப்புறப்படுத்த வேண்டாமா?
அவனும் அவளும் கொள்வது
ஏன் நட்பாகாது...?
இலக்கணம் மாற வேண்டும்...
பஞ்சு நெருப்பு
என்ற பழ மொழி யாவும்
கிழ மொழி ஆக வேண்டும்...
காதலர் தினத்தை விடவும்
நண்பர்கள் தினம் சிறக்க வேண்டும்
அவனும் அவளும்
நட்பென்ற வானத்தில்
சிறகடிக்க வேண்டும்

எழுதியவர் : சித்ரா ராஜ் (4-Apr-14, 9:16 pm)
Tanglish : avan aval natpu
பார்வை : 252

மேலே