இயற்கையின் சிற்றிறகு

கிடு கிடுக்கும் மேகமொன்று
தட தடக்கத் தென்றல் மோதி
பட படப்பில் பூமியில் இறங்க
கட கடவென பொழியும் மழையாய்...!!

சட சடவென சாரல் மழை
குடு குடுவென தரையில் உருண்டோடி
மட மடவென மடையுடைத்து
வெட வெடக்கச் செய்தது மண்ணை..,!

கொடு கொடுவென கேட்ட மண்ணும்
விடு விடு மழையே என்று
விம்மி விம்மி அழுதிடக் கண்டு
சுறு சுறுப்பாய் சேருமந்த கடலிலே...!

சில சில மனிதக் கூட்டம்
கிறு கிறுவென மயங்கிட
சர சரவென நொடியில் தாக்கி
பலப் பல மாற்றம் செய்யும்

பள பளவென மின்னல் வீசி
கல கலவென கதிகலங்கச் செய்யும்
கிளு கிளுப்பை துண்டிச் செல்லும்
பொல பொலவென ஆக்கிச் செல்லும்

எழுதியவர் : கனகரத்தினம் (5-Apr-14, 12:47 pm)
பார்வை : 506

மேலே