வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 4
ரோஷன். ஏ. ஜிப்ரி...இந்தத் தளத்தில் எல்லோருக்கும்
அறிமுகமான பெயர்தான். நான் தளத்தில் இணைந்த சில நாட்களுக்குள்ளாகவே...இவரது கவிதைகளைப் படிக்கும் வாய்ப்புப் பெற்று...பின் இன்றுவரை...அவரது கவிதைகளின் தொடர் வாசகனாய் இருப்பவன். ஒரு கதை எழுத்தாளருக்கு
தொடர் வாசகன் இருப்பது போல... ஒரு கவிஞருக்கு அமைவது... என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை இந்தத் தளத்தில் தொடர்ந்து எழுதுபவன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். அந்த விதத்தில்...ரோஷன். ஏ. ஜிப்ரியின் கவி ஆளுமை பற்றி...நான் அதிகம் சொல்ல எதுவும் இல்லை.
தன்னைப் பற்றிய அறிமுக பக்கத்தில்...ரோஷன்...
"கூடை கூடையாய் கனவுகள் இருக்கிறது...
வாழ்வின் முகங்களைத் தவிர.."என்று எழுதி இருக்கிறார். கனவுகளை விதைக்க ஒரு பிடி மண்
இல்லாமல் துரத்தப் பட்டவர்களின் வாழ்வின் துயரத்தைச் சொல்ல இதைவிட வேறு வார்த்தைகள் கிடைக்காது. இத்தனைக்கும்...
ஒரு பிடி மண்ணுக்காக "குரு ஷேத்திரம்" நடத்திய வரலாறும், நாகரிகமும் நம்முடையது. எதையும் பாராமல் இருக்க, தன்னலத்தோடு மட்டும் இருக்க
கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாய் பழகிவிட்டோம். இதில் மாற்றம் எப்போது வரும் என்றுதான் இன்னமும்...கூடை கூடையாய் கனவுகள் சுமந்து வசிக்கிறோம்.
வாழ்தல் சுமையாகி விட்ட தீவிலிருந்து வெளியேறி விட்டவரின் வாழ்வின் துயரங்களைப்,
பெரும் பாடுகளைத் தன் கவிதைகளில் தொடர்ந்து எழுதி வரும் ரோஷன்...இந்தத் தளம் மட்டுமின்றி...தமிழின் பெரும் கவிஞர்களாலும் உற்று நோக்கப் பட வேண்டியவர்.அலங்காரமான வார்த்தைகளின்றி... வாழ்வின் வலியை...உணர்த்தும் எழுத்துக்களால்...தமிழை அலங்கரிக்கும் ரோஷன்...இந்தத் தளத்தின் வளரும் கவிகளால் வாசிக்கப் பட வேண்டியவர்...
விவாதிக்கப் பட வேண்டியவர்...நன்கு தளத்தில் பகிரப் பட வேண்டியவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து..."அலகுகளால் செதுக்கிய கூடு" தந்தவரின் கவிதைகளுக்குள் நுழைகிறேன்....
மீண்டும் திரும்புவேன்...காலத்தின் துணையோடு...