குழந்தைகள்
வானத்து விண்மீன்கள்தான்
வந்திங்கு இறங்கினவோ குழந்தைகளாய்
அகிலத்து தேவதைகள்
அன்புடனே வந்தனவோ குழந்தைகளாய்
வட்டமிடும் பறவைகள்
வனப்புடனே ஆடி அசைந்தனவோ
குழந்தைகளாய்
தோட்டத்து மலர்களெல்லாம்
இதழ் விரித்து சிரித்தனவோ
குழந்தைகளாய் !