பறவை அழகுதான்

ஊரைவிட்டு பறக்கும்
இரைதேடும் பறவையாய்
உயிர் ஓரிடம்விட்டு-
வெறும் பெயர்தாங்கி
வெளிநாடு வாழ்பறவைகளே...!

பறக்கும் பறவை
பார்வைக்கு அழகுதான்
பாலைவன நடுவினிலே
பட்டமரம் துளிர்ப்பதெல்லாம்
பறவைகளின் கண்ணீராலோ.....?

எழுதியவர் : காசி. தங்கராசு (6-Apr-14, 1:32 am)
Tanglish : paravai alakuthan
பார்வை : 285

மேலே