ஏருழவு
சாணம் தெறித்த வாசலில் பூச்சூடி
சாந்து வைத்து புதுப்பெண் ணாகக்
காட்சித் தந்திட காளைகள் மூவிரு
கம்பீ ரமாக நின்றிட கழுத்திலே
ஒய்யா ரமாய்வீற் றிருக்கும் ஏரே
வயல்வந் தவுடனே ஆணவம் அங்கே
வயல்மண் ணுள்ளே சென்றிட அறுவர்
வரிசை மாறா துழுதி டுவாரே
வரிசை மாறா சால்கள் அழகாய்
வானவி லொத்த நெளிவாய்
அமைந்தி டுமீர் வரப்புக் கிடையிலே