கிழிந்த ரூபாய் நோட்டு

காமாத்திபுரா தெருக்களில்
புறாக் கூடுகளில் ஜன்னல்கள்
மூடியிருந்தாலும் அதன்
வாசல்கள் திறந்தேயிருந்தன!

வெள்ளை மனம் கொண்டவளோ
கொள்ளை அழகு!
உடலெங்கும் வலியுடன் புண்கள்
உதட்டில் பூசியிருந்தாள்
சிகப்புச் சாயம்! அவள்
அங்கங்களெல்லாம்
சிவக்க சிவக்க காயம்!

பெண் வடிவமெடுத்தவளோ
பேதை!
எந்த அத்தைமகனை நம்பி
ஏமாந்து போனாளோ? அவள்
அங்க உறுப்புகளில்
அப்படியென்ன ஆராய்ச்சியோ?
அவன் கொடுத்த
ரூபாய் நோட்டு போல
கிழிந்தே இருந்தது
அவள் உடலும்.....!


......................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (6-Apr-14, 10:27 am)
பார்வை : 270

மேலே