என் விழிகளில் ரணமடி 555

பெண்ணே...

உன்னோடு நான்
இருந்த போது...

முள்ளின் மீது
பனித்துளிகளை கண்டு...

முத்தம் பதித்தேன்
முத்து சிதறல்கள் என்று...

என்னை நீ பிரிந்த கணம்
முத்தம் பதித்தேன்...

என் இதழ்களில்
ரணமடி...

மழை நின்ற பின்னும்
மரநிழலில் மழை துளி போல...

என்னை நீ பிரிந்து
ஆண்டுகளாகியும்...

இன்னும் என் விழிகளில்
கண்ணீர் மழையடி...

கண்ணீர் தந்த
உயிர் காதலியே...

கண்ணீர் இல்லாமல்
நீ வாழவேண்டுமடி...

உன் விழிகளில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Apr-14, 4:10 pm)
பார்வை : 425

மேலே