படங்களால் பாழ்படும் பள்ளிகள்
இளமையின் மனதையெல்லாம்
சினிமாதான் சிதைக்குது
வளமான பாரதத்தை
படங்கள் இன்று தடுக்குது ......
விஷம்போன்ற காட்சிகள் இங்கே
விளம்பரமாய் ஆனது
விளையாட்டு பிள்ளை மனதியில்
விபரீதம் தோன்றுது .......
கல்விகற்கும் வயதில் இங்கே
காதலோ முளைக்குது
காண்களோ காமம் தேடி
கலாசாரம் அழியுது ......
சிந்தனைகள் தவறுதல் ஒன்றே
சினிமாக்கள் கொள்கையே
சீரழிக்கும் சமுதாயத்தை
அது மட்டும் உண்மையே .......
பத்துவகுப்பு முடிப்பதற்குள்ளே
பத்துமாதம் ஆகிறாள்
பெத்தவங்க இருந்தும் கூட
பொண்ணு கெட்டு போகிறாள் ......
பொழுதுபோக்கு சினிமா தானே
புற்றுநோயாய் ஆனது
பூவைபோன்ற பிள்ளைநெஞ்சம்
அதில் சிக்கி சாகுது .......
உற்றுநோக்கும் காட்சிகள் எல்லாம்
சுற்றம் கெடுக்கும் உண்மையில்
கெட்டுபோகும் காட்சிகள்தானே
சினிமாவின் திரையிலே .....
கட்டுகோப்பு இதிலே வேண்டும்
கண்விழிப்பு நமக்கு வேண்டும்
சுற்றம் கெடுக்கும் சினிமா இதனை
முற்றிலுமே தவிர்க்க வேண்டும் .......