பாரதம் மாறிட கனா கண்டேன்

கல்லூரிகள் யாவுமே
அரசுடமையாகி அதில்
தன்னார்வ சான்றோர்
பணிபுரிந்திட நான் கண்டேன்...!

அனைவர்க்கும் இலவசமாய்
நற்கல்வி பயிற்றிட
நற்பண்புக்கும் மதிப்பெண் தந்து
அறிவிற்கு விருந்திட நான் கண்டேன்...!

ஆன்றோர் சான்றோரும்
அரசபையில் வீற்றிட
ராணுவ உடல் தேர்விணை போல்
துணிச்சல் மிக்கவரை அரசாய் ஆக்கிட நான் கண்டேன்...!

படுக்கையறை முதல் பாதாளம் வரை
எடுப்பாய் இருக்கும் காவலர் துணிவால்
துகிலுறியும் தலைவனின்
தோலுரிக்க நான் கண்டேன்...!

வளையும் சட்டத்தை உடைத்தெறிந்து
தவறுக்கு கசையடி
கையூட்டுக்கு கரம் துண்டிப்பு
தண்டிக்கும் சட்டம் வந்திட நான் கண்டேன்...!

அச்சம் வந்து மனக்கதவடைக்க
தப்பு செய்திட நடுநடுங்கி
தனக்கென கிடந்த சுயநலம் பொதுநலமாய் மாறி
மனிதம் தலைத்திட நான் கண்டேன்...!

கன்னியர் கற்பை களவாடிட எண்ணிய
ஆடவர் ஆண்மையை நசுக்கிட நான் கண்டேன்
வரதட்சணை கொடுமை செய்யும் குடும்பத்தாரை
பொதுஇடத்தில் கட்டி கசையடி கொடுத்திட நான் கண்டேன்...!

வல்லமை செய்யும் இளைஞரெல்லாம்
வெள்ளுடை தறித்த மாதரை மறுமணமனமுடித்து
புதியபாரதம் வல்லரசாகி
இல்லறம் சிறக்க நான் கண்டேன்...!

முதலாளி பிடியில் சிக்குண்டு
சீரழியும் பாரதம் மீண்டெழ
தனிமனித சொத்தின் மதிப்பை
குறைத்திட நான் கண்டேன்...!

அதிகபட்ச சொத்தின் மதிப்பு
ஐம்பது கோடி நிர்ணயம் செய்திட
அதற்கு மேற்பட்ட சொத்துக்கள் யாவும்
அரசுடமையாக்கி பிறருக்கு வழங்கிட நான் கண்டேன்...!

மனிதநேயமெனும்
பசுத்தோல் போர்த்திய. புலியை
மறவர் குலப் பெண்கள் ஏறி மிதித்திட
உலகவங்கியும் பாரதத்தின் பாதம்பணிந்திட நான்கண்டேன்

ஏழைகளில்லா இந்தியாவை
கனவில் கண்டு விழித்தெழ
காரிருள் மறைந்து நம்பாரதம்
ஒளிபெற நான் கண்டேன் ...!!

எழுதியவர் : கனகரத்தினம் (8-Apr-14, 11:46 am)
பார்வை : 138

மேலே