உன்னிடம்

பேசும்போதெல்லாம்

கையில் சிக்கியிருக்கும்

பொருள்களை

கிழிந்தோ,மடித்தோ,

சுருட்டியபடியோ

இருக்கிறாய்,

பாவம் அவைகள்,

வாய்த்திருக்கிறது உன் வாயருகே

செவிச்சாய்த்து,

ஏதேனும் சொல்வாய் என்று,


சில வேளைகளில் அசைவிலே

ஆமோதிக்கிறாய்,

சில வேளைகளில் அசையவே

ஆமோதிக்கிறாய்,

ஆற்றுப்படுகை நாணல் நீ

அழகிய நீரில் ஆர்ப்பரிக்கிறாய்,

என் போல் அசிங்கமானவனையும்

ஆதரிக்கிறாய்,

நீ ரோஜாவானாலும்

உன் கையில் முள் சொல்

குத்துவதில்லை,

எப்போதும்,

எழுதியவர் : சபிரம் சபிரா (8-Apr-14, 11:42 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : unnidam
பார்வை : 54

மேலே