காதல்
என் இதயத்தை காணவில்லை
நீ என்னை நிமிர்ந்து பார்த்த
அந்த நிமிடத்தில் தான்
தொலைந்திருக்க வேண்டும்
அதை தேடிபிடித்து திருப்பி
கொடுத்து விடு என்றால்,
மௌனமாய் ஒரு புன்னகை
உதிர்த்தாயே நீயும்
திருப்பி தந்தால் மட்டும் என்ன
மறுபடியும் என்னிடம்
தொலைக்க தானே போகிறாய் என்றோ ...!!