அம்மா

அம்மா
அவ்வளவு வலியும்
தாங்கிக்கொண்டு
என்னை இவ்வுலகத்திற்கு
அறிமுகம் செய்தாய்.....
அந்த வலியில்
நீ
துடித்த துடிப்பை மறந்து
எனை
முதலில் கண்டு சிரித்த
என் - தாயே
என்
கடைசி மூச்சு
நிற்கும் வரை
நீ
தந்த நெஞ்சம்
நீயே வேண்டும் என்று
கெஞ்சும்........
ஒவ்வொரு
மனிதனும் பிறந்து
அவன்
சொல்லும் முதல் வார்த்தை
அம்மா
என்று தான்........
மார்போடு இணைத்து
மனதில் புதைப்பாள்
மாசு படாத இடம்
அது தானே என்று .......
எனை
நினைத்து நினைத்து மகிழ்ந்து
ஒவ்வொரு நொடியும்
எனக்காகவே வாழும்
என்
கடவுள்
என்
அம்மா தான்..................
உன்
மூச்சை நானும்
பகிர்ந்தேன்...
உன்
இரத்தத்தை நானும்
குடித்தேன்...
உன் பாசத்திலும்
உன் நேசத்திலும்
அளிக்கப் பட்ட
சொர்க்கம்.....
பத்து மாதம் தானா
என்று ஏங்கிக்கொண்டே
நம் உறவுடன்
உலகத்தை காண வந்தேன் ....
உலகத்தை பார்க்கும்
முன்......
என்
உலகமே நீ தான்
என்று பார்க்கும்
முன்.....
நம் உறவை
சில நொடிகளில்
அறுத்தனர்
தொப்புள் கொடியை.........
உன்
மாசற்ற காற்றை
சுவாசித்தேன்......
அன்னையே !
இந்த மாசடைந்த
காற்றை சுவாசிக்க
முடியவில்லை என்னால்
உன்
இதழ் பட்ட உணவு
எனக்கு
தேனமிர்தமாய் கொடுத்தாய்
அவையெல்லாம் வெறும்
பத்து மாதம் தானா......?
என்று ஏங்குகிறேன்
அன்னையே !
எனக்கு பால் கொடுக்க
நீ
உப்பு காரம் மறந்தாயே !
நான் யார் ?
உன்னில்
ஓர் உயிர்
உன்னை அழ வைத்த
ஓர் உயிர்
உன்னை கருவில் உதித்த
ஓர் உயிர்
அல்லவா ?
நான்.......
அழும் சத்தம் கேட்டால்
தூக்கத்தை கூட
துச்சமாக நினைத்தவளே
நான்
சிரிக்கும் சத்தம் கேட்டால்
பசியை கூட மறந்து
சிரித்தவளே ........
நான்
எப்போது பேசுவேன் - என்று
ஏங்கி தவித்தவளே
அம்மானு
சொல்லு என்று
எனக்கு ஆரம்ப
கல்வி கற்று தந்தவளே
உனக்கு நிகர்
எதுவும் இல்லை
யாரும் இல்லை
இவ்வுலகில் ..........