அழகுப் போட்டி
நான்...
உனக்காக எழுதும்
கவிதைகள் கூட
போட்டிப்போட்டுக் கொள்கின்றன.....
உன் உறுப்புகளுக்குள்
அழகுப் போட்டி வராதா என்று
கேட்கும்
உன்னிடம் எப்படி சொல்வேன்......
நீ
முதல் முறை
முத்தம் கொடுக்க
வந்தபோது.....
வெட்கத்தில் தள்ளிவிடவில்லை
கைகளுக்கும் கன்னத்திற்கும் நடந்த
யுத்தத்தால் என்று ........