மனிதனின் முதல் பிரிவு கருவறையிலிருந்து
என்
சிறிய வீட்டில்
பசி எடுக்கவில்லை
ஆடை அணியவில்லை
கண்களைக்கூட திறந்ததில்லை
மிதந்தேன்
அங்குமிங்குமாக
மிதந்துகொண்டே
உருண்டேன்
ஒரு வழியாய்
பத்தாம் மாதம்
ஒரு நாள் உந்தி உதைத்து
முட்டி மோதி
என் வீட்டின் கதவைத்திறந்தேன்
சில்லென்று
ஒரு பெருங்காற்று நிரப்பியது
உடல் முழுவதையும்
பயந்து
பின் சென்று
ஒளிந்துகொள்ள முயன்றேன்
விடாப்பிடியாய்
வெளியே இழுத்தனர்.
கத்திக்கதறினேன்
பயனில்லை
பதிலுக்கு
என் வீட்டுக்கும் எனக்கும்மான
இணைப்பின் பிணைப்பையே
அறுத்தனர்
புரிந்தது
என் வீட்டைவிட்டு
பிரிகப்பட்டுள்ளேன் என்று
ஒரே வலியும்
கோபமும் பசியும் எனக்கு
கண்ணை இருகமுடியபடியே கத்தினேன்
உடனே
ஒரு தேவதை
என்னை தன்கைகளினூடே
அனைத்து,
அவள் மார்பினில்
புதைத்து
போக்கினால் பசியை
புரிந்து கொண்டேன்
என் வீட்டின் அறை
பெரிதாக்கவேபட்டுள்ளது என்று.
மீண்டும்
மிதக்க ஆரம்பித்தேன்
அவளது அன்பில் என்றும்...