அர்த்தமிழந்த காத்திருப்பு

கரும்புக் காத்திருப்பு
காதல் காத்திருப்பு.
விரும்பும் காத்திருப்பு
அரும்பொன்று வர
பிரசவக் காத்திருப்பு. ஆனால்
பாவி என் காத்திருப்போ
பாழும் சாவுக்கு.

கண்ணிரண்டும் ஒளியிழந்து
காதிரண்டும் ஒலியிழந்து
உணவுகூட சுவை மங்கி
உணர்வெல்லாம் ஒடுங்கி இங்கு ஓர்
வாழும் சடலமாய் ஆனபின்னும்
கூட்டில் உயிர் மட்டும்
ஒட்டிக்கொண்டு போகலையே
என்ன செய்வேன் ?

மாதா அன்றே சலித்தாள் என்
மக்களோ இன்று சலித்தனர்
ஊரும் உறவும் முற்றாகக்
கசந்த பின்னே
இப்போதும்
பாவி என் காத்திருப்போ
பாழும் சாவுக்கு.

எழுதியவர் : நேத்ரா (8-Apr-14, 6:39 pm)
பார்வை : 75

மேலே