அன்பின்றி இங்கே எதுவுமில்லை

விரிந்த வெட்டவெளி
நீலப் பொட்டல்..
துணையற்ற அநாதை
நிலவுக்குக் காவலாய்
ஆயிரமாயிரம் முகில்கள் !

அன்றாடம் மலர்ந்து
மரித்தாலும் அனுதினமும்
பிரசவிக்கின்றன ,
மலர்ச்செடிகள் !

கால் வலிக்குமென
மகனைத் தலைபாரம்
சுமக்கும் கட்டிடத் தொழிலாளி !

தலைப்பிரசவத்திற்கு
தாய்வீடு வந்திருக்கும்
மகளிற்கு தன் தாலி விற்று
வளைக்காப்பு சீர் செய்கிறாள்
அந்தச் சின்னத்தாய்!

கணக்கிலா செல்வமென
தாய் தந்தையர்
பாசம் !

இருதுளி உயிர்
கலந்து ஒரு
சமுத்திரமாய்
காதல் !

தினமும் ஜனிக்கும்
உலகம் நிச்சயமாய்
இவற்றுக்காகவே !!

எழுதியவர் : கார்த்திகா AK (8-Apr-14, 6:17 pm)
பார்வை : 144

மேலே