மாற்றுத் திறனாளிகள்

உள்ளத்தில் உறுதிப் பூண்டு
உடலில் ஊக்கத்தை சுமக்கும்
உயிர்கள் நாங்கள்.....!

பிறரிடம் நாங்கள் பெறுவது
உதவியும் உபசரிப்பும் -ஆனால்
பிறர் எங்களிடம் பெறுவது
ஊக்கமும் தன்னம்பிக்கையும் ......!!

உடலால் மட்டுமே குறைந்த
நாங்கள் உள்ளத்தால்
உயர்ந்து நிற்கிறோம் ...!!

உப்பாக மாறினோம்
உலகை சுவைக்க வைத்து
உளமகிழ்கிறோம் ....!!


எங்களின் ஊக்கத்தை
உங்களின் தன்னம்பிக்கைக்கு
உரமாக இடுகிறோம் ....!!

கண்ணொளி இல்லா -நாங்களே
இக்கலியுகத்தில் கால் பதிக்க
நினைக்கும்போது.....!!

கண்கொண்டும் வாழ
வழியில்லை என்றெண்ணி-உன்
கண்ணையும் உடலையும்

மண்ணிற்கும் மண்புழுக்களுக்கும்
இரையாக்கிப் போட
இசைந்ததேன்....!!


கண்ணை விரிவாய்த் திற
கடின உழைப்பைக்
கையிலெடு .....!!

வாழ்வுகளும் வசந்தங்களும்-உன்
வாசற்கதவைத் தட்டும்
வாழ்த்துக்கள் ....!!

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (9-Apr-14, 8:04 am)
பார்வை : 298

மேலே