இதுவல்லவோ வாழ்க்கை
விலைவாசியில் பாதிப்பு இல்லை
ஊழலில் பங்கு இல்லை
மருத்துவர்களுக்கு ஊதியம் இல்லை
தேர்தல் பிரச்சாரம் இல்லை
போட்டி பொறாமைகள்
இல்லவே இல்லை ...........
மாறாக
சுகமான கனவுகள் ..
சுவையான உணவுகள் ..
சுமைகள் இல்லா வாழ்க்கை
சுதந்திரம் மனித உரிமை என
தாயின் கருவறையில்
ஒன்பது மாதம் சுழன்று கொண்டு இருக்கும்
எங்கள் வாழ்க்கை அல்லவோ வாழ்க்கை .....