எங்கும் வர்த்தகம் எதிலும் வர்த்தகம்

பூக்காரி தன்
பூ போன்ற குரல் வளத்தால்
பூவை முழுதாய் முழம் போடாமல்
பொலிவோடு பணம் பார்க்க

தரம் இல்லா
தராசினால் காய்கறி வியாபாரிகள்
தந்திரமாய் காசு பார்க்க ..

உணவகங்களில்
40 ருபாய் தோசைக்கு
நான்கு தேக்கரண்டி சட்னியை
நாசூக்காய் ஊற்றி
நாகரீகமாய் வர்த்தகம் செய்ய

கல்விக்கூடங்கள்
கருப்பு பணத்தை
கதாநாயகனாக்கி
காலத்தை ஓட்ட ...

பணம் இருந்தால்
படி ஏறு இல்லையேல்
வெளியேறு என்ற
கல்லூரிகளின் வாசகங்கள்
கண்ணீரை ஏற்படுத்த ...

ஆலயங்களில்
ஆனந்தமான தரிசனம்
அள்ளி கொடுக்கும் பணத்தினால்
என்ற நிலை அதிகரிக்க

ஒன்று வாங்கினால்
ஒன்று இனாம் என்ற
வியாபாரிகளின்
இலகுவான
வர்த்தகம்
வருத்தத்தை அளிக்க ...

சுற்றுபுறம் தான்
சுகதரமில்லா வர்த்தகம் என்றால் ..

எங்கள் பெற்றோர்கள்
கடன் வாங்கி
காசு கொடுத்து எங்களை
படிக்க வைத்தால்

எத்தனை இலட்சம் என்றாலும்
முதுமை பருவத்தில்
முதியோர் இல்லத்தில்
முழு மனதுடன் நங்கள் சேர்ப்போம்

என்று
உறவுகளும்
வர்த்தகமாகும் நிலை
மாறும் நாள் என்றோ ?????????????

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (9-Apr-14, 11:33 pm)
பார்வை : 91

மேலே