காதல்- நட்பு போராட்டம்
தனிமையை நேசித்தேன் கவலை மறந்தேன்
நட்பாய் நீ வந்தாய் தனிமை மறந்தேன்…
பாசத்தை காட்டினாய் பரிவாய் பேசினாய்
தூக்கத்தை மறந்தேன் சந்தோஷத்தை உணர்ந்தேன்
குறும்பாய் சிரித்தாய் பிரிவை உணர்த்தினாய்
வேண்டாம் இந்த நிலை..
இனியும் காதலுக்கும் நட்பிற்கும்
இடையில் போராட..
மீண்டும் தனிமை நேசிக்க பழகி கொள்கிறேன்…