உன் பிரிவில் எரியும் இதயத்தை அறிவாயா 555

உயிரே...

தென்றலில் மிதந்து வரும்
மலரின் மனம் போல...

என் கண்ணீரோ தென்றலில்
மிதந்து வருதடி...

உனக்கு சில்லென்று
வீசும் தென்றலாக...

மலரின் வாசம்
அறிந்தவளே...

என் கண்ணீரின்
வாசனை அறிவாயா...

துடித்த என் இதயம் உனக்கு
சொந்தம் என்றாய்...

உன் பிரிவில்
அழும்...

என் கண்களும்
இதயமும்...

சொந்தமென
வருவது யாரடி...

இதயமும் கல்லாய்
மாறிருக்கலாம்...

கல்லறையை போல...

தாயின் கருவில்...

மூன்றாவது மாதத்தில்
உருவான இதயமடி...

மூன்று மாதம்
பழகிய உனக்காக...

துடிப்பை நிறுத்திவிட
துடிக்குதடி...

ஒருமுறை என் இதயத்தின்
அழு குரலை கேட்டு பாரடி...

உன் பிரிவின்
வலியை சொல்லும்...

என் விழிகளும்
வலியுடன்...

உன் பிரிவின்
கண்ணீரால்...

ஒருமுறை கேட்டு பார்
உன் இதயத்தை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Apr-14, 3:52 pm)
பார்வை : 318

மேலே