தீரா தமிழ்க்காதல்

தீரா தமிழ்க்காதல்
வார்த்தைகளில் வர்ண ஜாலம் புரிந்தாள்
சித்திரை நடையில் என்னை சிதற வைத்தாள் -அவள்
மெல்லிடையை சுழற்றி என்னையும் நளினம் ஆக்கினாள் –அந்த
ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் பொருள் உணர வைத்து
சிந்தை மொழியிற் என்னிடம் ஊடற் செய்து
சின்ன அடிகள் என் கன்னத்தில் தந்து
என்னையும் அவள் இன்பத்தில் இடற செய்தாள்
சிணுங்கு மொழியில் என்னை சிறை வைத்து
முனங்கி பேசி மூடிய முத்தம் தந்து
இரட்டை அர்த்த சிலேடை பேச்சில் பாசாங்கு செய்து
‘அ ‘வும் அறியாத ‘ஒள ‘வும் தெரியாத
அந்தாதியற்ற நிலை கொண்டு கண் விழிக்க செய்தாள் –கடைசியில்
தனிமையில் என்னை இப்படியெல்லாம் புலம்ப வைத்தாள் -ஐயகோ
இதற்கு பெயரன்னவொ…!!
என் புற அகராதி சொன்னது -அவள்
உன்னை பைத்தியக்காரன் ஆக்கினாள்
என் மன அகராதி சொன்னது -இது
பித்து தமிழ் மீது நீ கொண்ட முத்துக்காதல்
என்றும் உனக்கிது தீரா காதலடா…!!!

எழுதியவர் : ஆறுமுகப்பெருமாள் (11-Apr-14, 6:42 pm)
பார்வை : 111

மேலே