கவிதைகள்

கவிதைகள்,

காலம் எழுதும் குறிப்பு !
எழுத்தென்னும் பூவின் சிரிப்பு !

கற்பனை ஆடும் களம் !
விற்பனை ஆகா நிலம் !

தாய்மொழி தமிழின் நகை !
காய் கனி மலர் வகை !

தொடத் தொட மலரும் மலர் !
சுடச் சுட செய்யும் சிலை !

நோட்டுப் புத்தகத்தின் நாணம் !
நாட்டைத் திருத்திடும் பாணம் !

தனிமைக் குழந்தையின் பொம்மை !
இனிமை சொரிந்திடும் உண்மை !

கரையில் அலைஎழுதும் காவியம் !
நுரையில் காற்றேழுதும் ஓவியம் !

காதல் வளர்க்கும் தூதன் !
மோதல் தடுக்கும் பூதம் !

மனதை ஈர்க்கும் விசை !
பேனா முனையின் பசை !

அழகு ரசத்தின் சாறு !
முடிவிலும் சிறக்கும் வேர் !

கவிதைகள் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (11-Apr-14, 2:46 pm)
Tanglish : kavidaigal
பார்வை : 137

மேலே