ஆண்டொன்று போனால் தமிழ் மறைந்து போகும்

சினம் கொண்டு பிறந்தாளோ?
சித்திரை பெண்ணும்
தமிழ்மொழி கண்ட காலம் தொட்டு
வருடத்தின் பெயரறியா...!!
தமிழன் கண்டு...

விஜயாண்டு மறைந்தால்
ஜெயாண்டு பிறந்தால் இன்று
அறுபது கலைப்போல்
அறுபது நாமம் சுமந்தவள்
அறிந்தவர் யார் யாரோ?!!

ஆங்கில ஆண்டை விமர்சையாய்
கொண்டாடும் தமிழா
அன்னை நாமம் நீ மறந்தாய்!
இதுதான் உன் சிறப்போ ?
பின் உலகில் ஏது செழிப்பு...!

வந்தாரை வாழ்வித்து
உன்னிலையை நீ மறப்பாய்...!
பின் நொந்து என்பயன்?
பண்டைய காலம் தொட்டு
பண்பினால் உயர்ந்து நின்று...

அன்புக்கும் ஆசைக்கும்
வேறுபாடு அறியாது..!
உலக தமிழர்க்கும் உன்னால்
தலைகுனிவை தந்திடுவாய்!

சூழ்நிலை மாறினாலும்
பருவங்கள் மாறினாலும்
நவநாகரிகமாக நீ மாறியும்
மாறாதிருப்பது உன் பொறுமையும்
அடுத்தவரை தூக்கிச் சுமப்பதும் தானே !

உறங்கியது போதும் இனியேனும்
விழித்தெழு ஜெயம் வந்து சேர
ஜெய ஆண்டு வாசலில்...
வரவேற்க வேண்டாமோ!!

விழி திறக்க மாட்டாயோ?
வழி பிறக்கச் செய்வாயோ !
தமிழ் அன்னை
பெற்ற மகற்க்கெல்லாம் வாழ்த்துக்கள்!!

வருத்தம் களைந்திடவும்
சித்திரை தாகம் தனிந்திடவும்...!
தமிழர் ஆண்டென்று உலகம்
கொண்டாடி மகிழ்ந்திடவும்
வாழ்த்துகிறேன்...

எழுதியவர் : கனகரத்தினம் (12-Apr-14, 12:57 am)
பார்வை : 147

மேலே