காதல் என்று உடைத்துப் போ

காற்றினில் வந்து போ
கால் தடம் தந்து போ
நிழலினை தீண்டியே
சிறு உயிர் உரசிப் போ..!!

புன்னகை உதிர்த்து போ
புது மழை பொழிந்து போ
புரியாத புதிராவது
பார்வையில் விடுத்துப் போ..!!

வண்ணங்கள் தீட்டிப் போ
வார்த்தைகள் கொட்டிப் போ
எண்ணங்கள் பிழைதிடவே
ஏதாவது சொல்லிப் போ..!!

சண்டைகள் போட்டு போ
சட்டென்று வெட்டிப் போ
கோபத்தின் தாபத்தில்
காதல் கனல் தூவிப் போ..!!

நாணத்தில் நனைந்து போ
நளினத்தில் நடந்து போ
தொலைந்தவனை மறுபடியும்
ஒளித்துவைத்து விளையாடிப் போ..!!

மெய் ஒன்று சொல்லிப் போ
பொய் ஒன்று சொல்லிப் போ
போகிற போக்கினிலே
புரிய வைத்து சிரித்துப் போ..!!

சொல்லாமல் சொல்லிப் போ
கொல்லாமல் கொண்டு போ
நீ இல்லாத பொழுதுகளை
பிம்பத்தால் கரைத்து போ..!!

ஏக்கங்கள் கலைத்து போ
தூக்கங்கள் கொடுத்து போ
எனக்கான சந்திப்பில்
காதல் என்று உடைத்துப் போ..!!

எழுதியவர் : வெ கண்ணன் (13-Apr-14, 10:37 am)
பார்வை : 118

மேலே